1953 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள San-Ikukai மருத்துவமனையில் நடந்த ஒரு சிறிய தவறு, இரண்டு குடும்பங்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது.A minor mistake at the San-Ikukai Hospital in Tokyo, Japan, in 1953 completely changed the lives of two families.
1953 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள San-Ikukai மருத்துவமனையில் நடந்த ஒரு சிறிய தவறு, இரண்டு குடும்பங்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது.
13 நிமிட இடைவெளியில் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகள், புதிதாக குளிப்பாட்டப்பட்ட பிறகு மருத்துவமனை ஊழியர்களால் தவறுதலாக மாற்றப்பட்டனர்.
பணக்கார குடும்பத்தில் வளர வேண்டிய குழந்தை, கணவரை இழந்த ஒரு ஏழைத் தாயிடம் சென்றது. வெறும் 100 சதுர அடி வீட்டில், அரசு உதவித் தொகையுடன் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த சிறுவன் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்தான். பகலில் தொழிற்சாலையில் வேலை செய்தான். இரவில் பள்ளிக்குச் சென்றான். பின்னர் திருமணம் செய்யாமல் லாரி ஓட்டுநராக வேலை செய்து, தன்னுடன் வளர்ந்த சகோதரர்களுக்கு ஆதரவாக வாழ்ந்தான்.
மறுபுறம், ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தை பணக்கார குடும்பத்தில் வளர்ந்தான். தனியார் ஆசிரியர்களிடம் கல்வி கற்றான். புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்தான். பின்னர் ஒரு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வெற்றிகரமான தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆனான்.
இந்த உண்மை பல தசாப்தங்களுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்தது. குடும்ப உறுப்பினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் DNA பரிசோதனை செய்யப்பட்டது. அதன் மூலம் அவர் அந்த குடும்பத்தின் உண்மையான மகன் அல்ல என்பது உறுதியானது.
மருத்துவமனை பதிவுகள் மூலம் உண்மையான உயிரியல் மகன் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவருக்கு 60 வயதாகிவிட்டது. ஆனால் அதற்குள் அவரது உண்மையான தாய், தந்தை இருவரும் உயிரிழந்திருந்தனர்.
2013 ஆம் ஆண்டு டோக்கியோ நீதிமன்றம், இந்த தவறால் அவர் இழந்த வாழ்க்கை வாய்ப்புகள் மற்றும் மன வேதனையை அங்கீகரித்து, மருத்துவமனைக்கு ¥38 மில்லியன் (அப்போது சுமார் $374,000) இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
ஒரு சிறிய தவறு...
இரண்டு குழந்தைகள்...
முற்றிலும் வேறுபட்ட இரண்டு வாழ்க்கைகள்...
"விதி" என்று நாம் நினைப்பதில், சூழலும் வாய்ப்புகளும் எவ்வளவு பெரிய பங்கு வகிக்கின்றன என்பதற்கு இது ஒரு உண்மைச் சம்பவம்....
A minor error at the San-Ikukai Hospital in Tokyo, Japan, in 1953 completely altered the lives of two families.
Two baby boys, born just 13 minutes apart, were accidentally swapped by hospital staff after being bathed.
The child who should have grown up in a wealthy family ended up with a widowed, impoverished mother. He had to make a living on government welfare in a tiny, 100-square-foot home.
The boy studied by candlelight; he worked in a factory during the day and attended school at night. Later, he worked as a truck driver and remained unmarried, dedicating his life to supporting the brothers with whom he had grown up.
Meanwhile, the child born to the poor family grew up in a wealthy household. He received an education from private tutors and attended a prestigious university. He eventually became the successful CEO of a major real estate company.
This truth came to light decades later. Suspicions among family members led to a DNA test, which confirmed that he was not the family's biological son.
By the time the true biological son was identified through hospital records, he was already 60 years old. Sadly, both his biological parents had already passed away.
In 2013, a Tokyo court acknowledged the life opportunities lost and the emotional distress caused by this error, ordering the hospital to pay ¥38 million (approximately $374,000 at the time) in compensation.
A small mistake...
Two children...
Two vastly different lives...
This is a true story illustrating the immense role that circumstances and opportunities play in what we often call "fate."
Comments
Post a Comment