நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

#நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல். ❤️

ஒரு புரட்சியாளன் என்றால் அவன் உலக ஆசைகளைத் துறந்த துறவியாகத்தான் இருக்க வேண்டும்" என்று இந்தச் சமூகம் கட்டமைக்கும் போலிப் புனிதத்தன்மை, அந்த மாவீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எந்தளவுக்குக் கொடூரமாகச் சிதைக்கிறது என்பதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - எமிலி செங்க்ல் தம்பதியரின் வாழ்க்கையே ஒரு மிகச்சிறந்த உதாரணம்! 

8 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை 1937-ல் ஆஸ்திரியாவில் எமிலி செங்க்லை நேதாஜி ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், தனது அரசியல் இலக்கு மற்றும் மக்கள் மத்தியில் இருக்கும் "இமேஜ்" பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 1945-ல் அவர் இறக்கும் வரை இந்த உறவை வெளி உலகிற்குத் தெரியாமல் ரகசியமாகவே வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

நாட்டின் விடுதலைப் பயணத்திற்காக 1943 பிப்ரவரியில் நேதாஜி தென்கிழக்கு ஆசியாவுக்குப் புறப்பட்டபோது, அவரது மகள் அனிதாவுக்கு வெறும் 3 மாதங்களே ஆகியிருந்தது. தனது அரசியல் மிஷனுக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக, தனது மனைவி மற்றும் மகளுக்கு எவ்விதமான பொருளாதாரப் பாதுகாப்பையோ, வாழ்வாதாரத்தையோ அவரால் செய்ய முடியாமல் போனது.

நடுத்தெருவில் தவித்த குடும்பம் இரண்டாம் உலகப் போரின் கோரப்பிடியில் சிக்கியிருந்த ஐரோப்பாவில், எமிலியையும் அனிதாவையும் எவ்வித பின்னணியும் இன்றித் தங்களின் சுய உழைப்பை மட்டுமே நம்பி, வறுமையிலும் பட்டினியிலும் நடுத்தெருவில் போராடி வாழ வேண்டிய கொடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

நேதாஜியின் தீவிர ஆதரவாளர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்ட பலர், 20-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை எமிலிக்கும் நேதாஜிக்கும் இருந்த உறவையும், அவர்களது திருமணத்தையும் ஏற்க மறுத்து, தொடர்ந்து மறைத்தே வந்தனர். நேதாஜி ஒரு குடும்பஸ்தர் என்பதை ஏற்றுக்கொண்டால் அவரது புனிதத் தன்மை குறைந்துவிடும் என்று இந்த போலி ரசிகர்கள் பயந்ததுதான் இதற்குக் காரணம்!

ஒற்றை வரியில் சொல்லப்போனால் ஒரு மாபெரும் புரட்சியாளனை "மனிதனாகப்" பார்க்க மறுத்து, அவனைக் கடவுளாக மட்டுமே சித்தரிக்க முயலும் போலிப் புனிதவாதிகள், அந்தப் புரட்சியாளனின் குடும்பத்தினருக்குச் செய்யும் துரோகம், எதிரிகள் செய்யும் துரோகத்தை விட மிகக் கொடூரமானது! 💔😭

#nethajisubashchandrabose #nethaji #tamil #Tamilarpayanam 

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...