15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி. ஆம் கடந்த ஜூன் 6ம் தேதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் காணாமல் போன இந்த சிறுமிக்காக ஆந்திர மாநில அரசின் உயரதிகாரிகள், அமைச்சர்கள் , ட்ரோன்கள் இயக்குபவர்கள், காவல் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர், வனத்துறையினர், பேரிடர் மீட்புக்குழு என பல்வேறு துறையினர் ஞானேஸ்வரியை தேடி வருகின்றனர். ஆனால் சிறுமி கிடைத்தபாடில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சிறுமி காணாமல் போனதில் எந்த தடயமும் இந்த 15 நாட்களில் கிடைக்காதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல் ஒட்டுமொத்த துறையும் இந்த சிறுமிக்காக அலைந்து திரிந்து தேடி வருகிறது. காக்கிநாடா மாவட்டத்தில் தொண்டவாகா பஞ்சாயத்து சி.ஹெச் அக்ரகாரத்தில் உள்ள பனை எண்ணேயான பாம் ஆயில் எடுக்கும் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை சார்ந்த தோட்டத்தில் பரமாரிப்பாளராக இருக்கும் சுங்கரா கணேஷ் என்பவரின் மகள்தான் இந்த ஞானேஸ்வரி. இரண்டு வயதாகும் ஞா...
#நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல். ❤️ ஒரு புரட்சியாளன் என்றால் அவன் உலக ஆசைகளைத் துறந்த துறவியாகத்தான் இருக்க வேண்டும்" என்று இந்தச் சமூகம் கட்டமைக்கும் போலிப் புனிதத்தன்மை, அந்த மாவீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எந்தளவுக்குக் கொடூரமாகச் சிதைக்கிறது என்பதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - எமிலி செங்க்ல் தம்பதியரின் வாழ்க்கையே ஒரு மிகச்சிறந்த உதாரணம்! 8 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை 1937-ல் ஆஸ்திரியாவில் எமிலி செங்க்லை நேதாஜி ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், தனது அரசியல் இலக்கு மற்றும் மக்கள் மத்தியில் இருக்கும் "இமேஜ்" பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 1945-ல் அவர் இறக்கும் வரை இந்த உறவை வெளி உலகிற்குத் தெரியாமல் ரகசியமாகவே வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். நாட்டின் விடுதலைப் பயணத்திற்காக 1943 பிப்ரவரியில் நேதாஜி தென்கிழக்கு ஆசியாவுக்குப் புறப்பட்டபோது, அவரது மகள் அனிதாவுக்கு வெறும் 3 மாதங்களே ஆகியிருந்தது. தனது அரசியல் மிஷனுக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக, தனது மனைவி மற்றும் மகளுக்கு எவ்விதமான பொருளாதாரப் ப...
12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை கிரிமியாவின் "ஹச்சிகோ" என்று அன்புடன் அழைக்கப்பட்ட முக்தார் என்ற நாயின் கதை, உலகம் முழுவதும் விலங்குகளின் விசுவாசத்திற்கு ஒரு மறக்க முடியாத அடையாளமாக திகழ்கிறது. 2011-ஆம் ஆண்டு, கருங்கடல் (Black Sea) கடற்கரையில் உயிர்காப்பாளராக (Lifeguard) பணியாற்றிய முக்தாரின் எஜமான், ஒருவரைக் காப்பாற்றும் முயற்சியில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். ஆனால் அதை முக்தார் புரிந்துகொள்ளவில்லை. 💔 தனது எஜமான் ஒருநாள் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில், 12 ஆண்டுகளுக்கும் மேலாக, தினமும் அதே கடற்கரை நடைபாதைக்கு வந்து, மக்கள் கூட்டத்தில் தனது எஜமானைத் தேடிக் கொண்டே இருந்தது. அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்த முக்தார், யால்டா நகரத்தின் அன்பான அடையாளமாக மாறியது. அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அதற்கு உணவு, தண்ணீர் மற்றும் அன்பை வழங்கி பராமரித்தனர். 🎺 அந்த காலத்தில், விக்டர் மாலினோவ்ஸ்கி என்ற தெரு டிரம்பெட் இசைக் கலைஞருடன் முக்தாருக்கு ஒரு அழகான நட்பு உருவானது. அவர் இசை வாசிக்கும்போ...
Comments
Post a Comment