உயிரைப் பொருட்படுத்தாமல் குழந்தைகளை காப்பாற்றிய 11 வயது சிறுவன்! ❤️

🔥 உயிரைப் பொருட்படுத்தாமல் குழந்தைகளை காப்பாற்றிய 11 வயது சிறுவன்! ❤️🙏

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆஜம்‌கர் பகுதியில் 2010 செப்டம்பர் மாதம் நடந்த ஒரு சம்பவம் இன்று வரை மனிதநேயத்தின் அடையாளமாக பேசப்படுகிறது.

பள்ளிக்குச் குழந்தைகளை அழைத்துச் சென்ற மாருதி வேன் ஓடிக்கொண்டிருக்கும்போதே திடீரென தீப்பிடித்தது. சில நொடிகளில் தீ வேகமாக பரவ, வாகனத்துக்குள் இருந்த குழந்தைகள் அலறி அழத் தொடங்கினர். அப்போது அருகில் இருந்த சிலர் பயத்தில் விலகி ஓடியுள்ளனர்.

அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த 11 வயது சிறுவன் ஓம் பிரகாஷ் யாதவ், குழந்தைகளின் அலறலை கேட்டவுடன் ஓடிவந்தான். “அங்கே போகாதே… தீ அதிகமாக இருக்கிறது…” என்று பெரியவர்கள் எச்சரித்தும், உள்ளே சிக்கியிருந்த குழந்தைகளின் அழுகுரலை கேட்ட அந்த சிறுவன் ஒரு நொடியும் தயங்கவில்லை.

அடுத்த கணம்… கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த வேனின் கதவைத் திறந்து உள்ளே பாய்ந்தான். எரியும் சூட்டை பொருட்படுத்தாமல் குழந்தைகளை ஒருவருக்கொருவராக வெளியே கொண்டு வந்தான். பின்னர் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

ஆனால் அந்த வீரச் செய்கைக்காக அந்தச் சிறுவன் பெரிய விலையைச் செலுத்த வேண்டி வந்தது. ஓம் பிரகாஷின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. முகத்தின் ஒரு பகுதியும் கடுமையாக சேதமடைந்தது.

தன்னுடைய உயிரையே பணயம் வைத்து பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய இந்த 11 வயது வீரனை நாடே பின்னர் தேசிய வீரத்திற்கான “சஞ்சய் சோப்ரா பிரேவரி அவார்ட்” வழங்கி கௌரவித்தது. தீக்காயங்களுடன் மேடையில் விருது பெற வந்த அந்த சிறுவனை முழு அரங்கமும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றது… ❤️

மனிதநேயம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை நிரூபித்த அந்த தங்க மனசுக்கார சிறுவனுக்கு ஆயிரம் வணக்கங்கள்… 🙏💐
✍️ #Sivakumarkumarapuram 

#ஓம்பிரகாஷ்யாதவ் #வீரச்சிறுவன் #மனிதநேயம் #உத்தரபிரதேசம் #ஆஜம்கர் #குழந்தைகளைகாப்பாற்றினார் #இந்தியாவின்_பெருமை #தைரியம் #வீரவணக்கம் #உயிர்காக்தயஹீரோ

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...