இனிமே இந்த செவுரு எங்களுதுன்னு சொல்றமாரி தொடர்ந்து 2வது தடவையா Final போறாங்க Rcb.

RCB INTO THE FINALS 🎉

இனிமே இந்த செவுரு எங்களுதுன்னு சொல்றமாரி தொடர்ந்து 2வது தடவையா Final போறாங்க Rcb. 

ஆரம்பத்துல ஆடன ஆட்டமும் , கடைசிவரை ஆடன ஆட்டமும் குறையவே இல்ல. ஒரே rhythm தான் series முழுசும். 🔥
எதிர்பாத்தது போலவே Sai & Gill அவுட் ஆனதும் GT அணி முடியறாங்க. 92 என்கிற பெரிய வித்யாசத்துல ஜெயிக்கறாங்க Rcb.

Patidar வெறும் 33 பாலுக்கு 93 அடிச்சதெல்லாம் படம். இந்த ரன்தான் 250 போக help பண்ணுச்சு. நல்ல hitting. 9 Six, 5 Fours. 👏

Padikkal ஒரு 30(19), Kohli ஒரு 43(25), Krunul ஒரு 43(28), Venkatesh 17(9). Jitesh 15(5). இப்படி எல்லாமே pure hittingsஆ இருந்தது. 👌Score 250ல போய் நின்னது.

Buvi, Gillஐ அட்டகாசமா bowled எடுத்தார். Hazlewood, Buttlerஐ bowled பண்ணார். அங்க தெரிஞ்சது அவங்க accuracy.👌👏 சாய் எதிர்பாராதவிதமா அவுட் ஆக GT ஆட்டம் கண்டது. Tewatia ஒரு 68 சேர்த்தார் அது ஒரு ஆறுதல் hitting. இருந்தாலும் அது ஒரு நல்ல ஆட்டம்.👏

மத்த டீம்களைவிட double times betterஆ பண்றதுனாலதான் Rcb topல இருக்காங்க. இது வேற லெவல் dominance.👌👏
இப்ப Finalக்கும் போயிட்டாங்க. இனி ஒரு போட்டிதான் கப்ல கை வச்சரலாம். 

புதிய RCB புதிய சரித்திரம் படைக்க காத்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...