பிரதிநிதித்துவத்தை இம்முறை இழந்து இருக்கிறது முத்தரையர் சமூகம்!!
45 ஆண்டுகளாக அதிமுக மற்றும் திமுக ஆட்சி காலங்களில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் ஒரே ஒரு அமைச்சரவை பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொண்ட முத்தரையர் சமூகம் முதல்முறையாக அமைச்சரவையில் தனது பிரதிநிதித்துவத்தை இழந்து இருக்கிறது....
எம்.ஆர்.கோவேந்தனில் தொடங்கி, சந்திரசேகரன், கு.ப.கிருஷ்ணன், புலவர் செங்குட்டுவன், செல்வராஜ், வெங்கடாசலம், பரஞ்சோதி, அண்ணாவி, சிவபதி, வளர்மதி, மெய்யநாதன் வரை கிடைத்த பிரதிநிதித்துவத்தை இம்முறை இழந்து இருக்கிறது முத்தரையர் சமூகம்!!
தவெக கட்சி கொடியில் முத்தரையர் மன்னரின் அடையாளமான வாகை பூவை வைத்து முத்தரையர் மக்களின் ஓட்டுக்களை அறுவடை செய்த விஜய் அவர்கள் இந்த முத்தரையர் சமுகத்திற்கு ஒரு அமைச்சர் பதவியை கூட வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது..
அதற்கு அதிமுக மற்றும் திமுக வில் கூட ஒரு அமைச்சர் பதவியாவது குடுத்து வைத்தர்கள். ஆனால் மாற்றம் வேண்டும் என்பதால் வெறும் திரை கவர்ச்சிகாக மட்டும் வாக்களித்த முத்தரையர் சமுகம் அந்த ஒரு அமைச்சர் அங்கீகாரத்தையும் இழந்துள்ளது என்பது பகிரங்கமான உண்மை 😖
என்னதான் மாற்று அரசியல் வேண்டும் என்று அனைவரும் நினைத்தாலும் தன் சமூகத்தின் பயன் கருதியே வாக்காளித்துளனர். ஆனால் எந்த ஒரு எதிர்கால நலனும் யோசிக்காமல் வாக்களித்து இருந்த கொஞ்ச அரசியல் அதிகாரத்தையும் இழந்த சமுகம் இந்த அறிவற்ற முத்தரையர் சமுகம் தான் 🤦
Comments
Post a Comment