அன்பு மகள் சீதாலட்சுமியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்...

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்த, விராலிமலை தொண்டைமாநல்லூர் மணக்குடிபட்டியைச் சேர்ந்த இளம் மாணவி சீதாலட்சுமி (19), அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ள செய்தி மனதை உலுக்கும் வகையில் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.

கனவுகளோடு கல்வி கற்று, குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாக வாழ்ந்து வந்த மகளை இழந்து துயரத்தில் தவிக்கும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், கண்ணீரில் தத்தளிக்கும் சக மாணவிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிகிச்சையின்போது அளவுக்கு மீறிய மயக்க மருந்து செலுத்தப்பட்டதே உயிரிழப்பிற்குக் காரணம் என பெற்றோரும், மாணவிகளும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அரசு உடனடியாக உயர்மட்ட மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், மருத்துவ அலட்சியம் உறுதி செய்யப்பட்டால் அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதோடு, உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடும், தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஒரு இளம் உயிரின் இழப்பு இனி ஒருபோதும் மீண்டும் நிகழாத வகையில், அரசு மருத்துவமனைகளில் நோயாளி பாதுகாப்பு மற்றும் சிகிச்சை நடைமுறைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

அன்பு மகள் சீதாலட்சுமியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

ஓம் சாந்தி 🙏🏻

Nainar Nagenthran
Vanathi Srinivasan
K.Annamalai
BJP Tamilnadu
BJMM TN

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...