15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

ஆம் கடந்த ஜூன் 6ம் தேதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் காணாமல் போன இந்த சிறுமிக்காக ஆந்திர மாநில அரசின் உயரதிகாரிகள், அமைச்சர்கள் , ட்ரோன்கள் இயக்குபவர்கள், காவல் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர், வனத்துறையினர், பேரிடர் மீட்புக்குழு என பல்வேறு துறையினர் ஞானேஸ்வரியை தேடி வருகின்றனர். ஆனால் சிறுமி கிடைத்தபாடில்லை.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சிறுமி காணாமல் போனதில் எந்த தடயமும் இந்த 15 நாட்களில் கிடைக்காதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல் ஒட்டுமொத்த துறையும் இந்த சிறுமிக்காக அலைந்து திரிந்து தேடி வருகிறது.

காக்கிநாடா மாவட்டத்தில் தொண்டவாகா பஞ்சாயத்து சி.ஹெச் அக்ரகாரத்தில் உள்ள பனை எண்ணேயான பாம் ஆயில் எடுக்கும் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை சார்ந்த தோட்டத்தில் பரமாரிப்பாளராக இருக்கும் சுங்கரா கணேஷ் என்பவரின் மகள்தான் இந்த ஞானேஸ்வரி. இரண்டு வயதாகும் ஞானேஸ்வரி கடந்த ஜூன் 6ம் தேதி தந்தை வேலைக்கு செல்லும்போது பின்னாடியே ஓடியிருக்கிறார், அப்படிலாம் வரக்கூடாது என கண்டித்த தந்தை வீட்டில் வந்து மகளை விட்டுவிட்டு மனைவி பவானியிடம் குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லி சென்றிருக்கிறார். இந்த நேரத்தில் இவர்களின் இன்னொரு ஆறு மாத குழந்தை அழுகவே தாய் பவானி அந்த குழந்தையை பார்க்க வீட்டுக்குள்ளே சென்றிருக்கிறார், வெளியே விளையாடிய அந்த குழந்தை திரும்பவும் தந்தை போன பாதையை நோக்கி தந்தையை தேடி ஓடியிருக்கிறது, அதன் பின்னே அவர்கள் வளர்த்த 6 மாத குட்டி நாயும் ஓடியிருக்கிறது, இது சிசிடிவியில் பதிவாகியுள்ளது, அதன் பின் அந்த குழந்தை, நாய் இருவரையுமே காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அரசு நிர்வாகம் தனது மொத்த படைகளையும் இறக்கி தேடி வருகிறது ஆனால் குழந்தை கிடைத்தபாடில்லை. குழந்தையும் நாயும் காணாமல் போய்சில நாட்கள் கழித்து அவர்களின் அந்த வளர்ப்பு நாய் மட்டும் திரும்ப வந்துள்ளது வந்த நாய் சரியாக குரைக்க கூட முடியாமல் இற***ந்த்***து விட்டது இதனால் இப்போது பிரேத பரிசோதனை செய்துள்ள மருத்துவர்கள் ஒரு வாரம் கழித்துதான் அதன் அறிக்கையை தர முடியும் என அந்த நாய் மறைந்ததற்கான காரணத்தை அறிந்து ஏதாவது குழந்தை சம்பந்தமான க்ளு கிடைக்குமா என காவல்துறை தேடி வருகிறது.

குழந்தையை யாரும் கடத்த வேண்டும் என கடத்தினார்களா என்றால் இல்லை அந்த குழந்தைதான் ஓடியிருக்கிறது. நாயும் ஓடியிருக்கிறது, குழந்தையுடன் ஓடிப்போய் திரும்பி வந்த நாய் உயிருடன் இல்லை, அந்த குழந்தை எத்தனை கிலோ மீட்டர் ஓடியிருக்க முடியும் 40 கிமீ பரப்பளவுள்ள காட்டுக்குள் பல்வேறு நவீன கருவிகள், ட்ரோன்கள் போன்றவற்றை வைத்து தேடியும் இன்னும் அந்த குழந்தை கிடைக்காதது தினசரி இந்த குழந்தை பற்றிய செய்தியை உற்று நோக்கும் மக்களுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகள் எதுவும் தூக்கி விட்டு போயிருக்குமோ விலங்குகள் நடமாட்டம் உள்ளதா என்று பொம்மையில் இறைச்சியை வைத்து விலங்குகள் நடமாட்டத்தையும் கண்காணித்து வருகிறார்கள், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமே அந்த குடும்பத்துக்கு ஆதரவாக இருந்து களமிறங்கினாலும் ஒரு சின்ன க்ளூ கூட குழந்தை விவகாரத்தில் கிடைக்காதது வருத்தம்தான்.

எப்படியாவது ஞானேஸ்வரி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே அந்த குழந்தை உயிருடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...