பெங்களூருவில் இருந்து வெளியாகியுள்ள இந்த செய்தி மனித மனசாட்சியையே உலுக்கும் வகையில் உள்ளது...

பெங்களூருவில் இருந்து வெளியாகியுள்ள இந்த செய்தி மனித மனசாட்சியையே உலுக்கும் வகையில் உள்ளது.

தனது சொந்த ஆசைகளுக்கும், காதலனுடனான வாழ்க்கைக்கும் இடையூறாக இருப்பதாக கருதி, ஒரு தாய் தனது ஐந்து வயது மகளையே கொன்றுவிட்டதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் இது.

பெங்களூரு கடுகோடி அருகிலுள்ள சீகேஹள்ளியில் தான் வெண்ணிலா என்ற அந்த பிஞ்சுக் குழந்தையின் உயிர் பறிக்கப்பட்டது.

கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்த வழக்கறிஞரான பிரியங்கா, ரியல் எஸ்டேட் தொழிலதிபரான தனது காதலன் மோகனுடன் வசித்து வந்தார்.

இருவரின் புதிய வாழ்க்கைக்கு குழந்தை தடையாக இருக்கும் என்று கருதியதாலேயே இந்த கொடூரச் செயல் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரியங்காவின் பிறந்தநாளன்று குழந்தைக்கு பிரியாணியும் ஐஸ்கிரீமும் கொடுத்துவிட்டு, ஏசி இயங்கிக் கொண்டிருந்த காரில் தூங்க வைத்ததாகவும், மறுநாள் காலை குழந்தை எழுந்திருக்கவில்லை என்றும் முதலில் அவர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், குழந்தையின் தந்தை பிரவீன் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையிலும், உடற்கூறு ஆய்வு அறிக்கையிலும் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

தங்களது வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக அந்த ஐந்து வயது சிறுமியை கொடூரமாக தாக்கி, பின்னர் மூச்சுத்திணறடித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

காருக்குள் உயிர் பிழைக்க போராடிய அந்த தருணத்தில், உலகிலேயே அதிகம் நம்பிய தனது தாயையே அந்த குழந்தை உதவிக்காக அழைத்திருக்கலாம். 

ஆனால் அங்கே தாய்மை இல்லை; மனிதநேயமும் இல்லை.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காதலன் மோகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆனால், தனது சொந்த மகளின் உயிரை பலிகொடுத்ததாக குற்றம் சாட்டப்படும் தாய் பிரியங்கா தற்போது தலைமறைவாக உள்ளார்.

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...