அந்த சின்ன சிறிய நாடு பரப்பளவில் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை விட சிறியதாம்..
கேப்வெர்டே என்னும் ஐந்து லட்சம் மக்கள் தொகை உள்ள சின்ன சிறிய நாடு கூட உலக கோப்பை கால்பந்து போட்டிற்கு தகுதி பெற்று பலம் வாய்ந்த ஸ்பெயின் அணி கூட மோதி டிரா செய்துள்ளது..
அந்த சின்ன சிறிய நாடு பரப்பளவில் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை விட சிறியதாம்..
உலக முழுவதும் அதிக மக்களால் பார்க்கப்படும் , விளையாடப்படும் ஒரு விளையாட்டு கால்பந்து ⚽ ..
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் பங்கு பேரும் அணிக்களுக்கே கோடி கணக்கில் பணம் 💰..
ஆனால் நம் நாட்டில் கிரிக்கெட்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு கொடுப்பதில்லை..
இதுவரை ஒரு முறை கூட இந்திய கால்பந்து அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது இல்லை..
இந்தியர்கள் இன்று உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினாலும் இந்தியர்கள் சாதிக்க முடியாத ஒரு துறை என்றால் என்னைப் பொறுத்தவரை விளையாட்டு துறை தான்..
அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் ஒலிம்பிக் போட்டிகள்..
சின்ன சிறிய நாடுகள் கூட தங்கம் வாங்குவாங்க...
ஆனால் இந்தியா ஒரு தங்கம் வாங்குவதே அரிது..
இந்தியாவில் அனைத்து விளையாட்டுகளுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும்..
மேலும் இந்தியாவில் விளையாட்டு துறையில் அரசியல் தலையீடு அதிகம்..
அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் இடம் தான் விளையாட்டு துறை பதவிகள் உள்ளது..
இதெல்லாம் மாறாத வர்ரே இந்தியர்கள் விளையாட்டு துறையில் ஜொலிக்க முடியாது..
#FIFAWorldCup #India #FIFA #FIFAWorldCup2026
Comments
Post a Comment